பழைய தமிழ் படங்களில் பார்த்தோம்னா அது நடிகர் திலகம் படமா இருந்தாலும் இல்ல மக்கள் திலகம் படமா இருந்தாலும், கதா நாயகன் நற்பண்புகளின் அடையாளமா இருப்பார். பெண்களை வணங்குபவராக, சட்டத்தை மதிப்பவராக, நேர்த்தியான ஆடை அணிந்திருப்பவராக, நன்றாக வகிடு எடுத்து தலை வாரி இருப்பவராக (அது விக்காக இருந்தாலும், நேர்த்தியான விக்) கதையின் நாயகன் சித்தரிக்க பட்டிருப்பார். ஒரு வயாதான போலிஸ் கான்ஸ்டபில் ஒரு லாட்டியோட வற்றாத பார்த்து சீட்டாடிட்டு இருக்கற ஒரு பெரிய முரட்டு கும்பல் பயந்துகிட்டு ஓடும். லஞ்சம் வாங்கற போலிஸ் அதிகாரிய, இல்ல பெண்கள மானபங்க படுத்தற போலிஸ் அதிகாரிய, இல்ல அடி வாங்கற போலிஸ் அதிகாரிய பழைய படங்களில் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்ல. புகைப்பதும் மது அருந்துவதும் வில்லனின் வேலை. வில்லனிடம் இருக்கும் பட்டா கத்தி பயங்கரமான ஆயுதம், ஆனா அது யாரையும் அதிகம் வெட்டி பார்க்க முடியாது. சண்டைனா, அது தடில போட்டுக்கறது, ஒருவேளை சரித்திர படம்னா, அது வாள் சண்டை. டாக்டர்கள் நம்பகத்தன்மை இருப்பவர்கள். ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டிய தெய்வங்கள்.
கிட்டத்தட்ட அப்போதைய சமூகமும் அப்படித்தான் இருந்தது. நான் பள்ளியில் படிக்கும்போது, வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவன் பின்னாடிதான் ஒரு பெரிய கும்பல் இருக்கும். பெண்களிடம் அவனுக்கு தான் ஒரு மரியாதை. அவன் தான் கிளாஸ் லீடர். ஆசிரியர போற வழியில் பார்த்தா சைக்கிள விட்டு கீழ இறங்கி வணக்கம் சொல்லும் மரியாதை. போலீசிடம் விடுங்க, காக்கி சட்டை போட்டுட்டு இருக்கிற எங்க பள்ளி வாட்ச்மேனிடம் ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. போலீஸ்காரரை பார்த்தா ரொம்ப பயம். படித்தவர்களில் ஊரில் ஒன்று இல்லை ரெண்டு பேரு தான் குடிக்கரவன்களா இருப்பாங்க.
இப்ப இருக்கற சினிமாவ பார்த்தா (எல்லா படங்களும் இல்லை, ஆனா பெரும்பான்மையான படங்கள்), மதுரைன்னாவே அது அரிவாள முதுகுல செருகிகிட்டு சுத்தறவங்க ஊரு (சங்கம் வச்சு தமிழ் வளர்த்த ஊரு அதுன்னு பள்ளியில் படிச்சதையே மறக்க வச்சிட்டாங்க). பெரும்பாலான கதா நாயகர்கள் வீட்டுக்கு அடங்காத பய்யன். போலிஸ்காரங்கதான் பெரும்பாலும் வில்லன்கள். அதுவும் காக்கி சட்டையோட ஒரு லுங்கி கட்டுன கதா நாயகன் கிட்ட அடி வாங்குவாங்க (அந்த கதா நாயகனும் ஒரு பொறுக்கியாதான் இருப்பார்). ஒவ்வொரு படத்திலும் வித விதமான கொடூரங்களில் கொலை நடக்கும். போலிஸ விட கொலை பண்றவன பார்த்தா தான் ஊரே நடுங்கும். உள்ளூர் தாதாவ பார்த்து போலிஸ் கமிசனர் நடுங்குவார் இல்லே அவரோட கைக்கூலிய இருப்பார். ஆசிரியர் எல்லாம் மாணவர்களால் கிண்டல் பண்ணப்படுவதற்காக இருக்கும் ஒரு பாத்திரம். டாக்டர்கள் நம்பப் பட முடியாத ஆட்கள். மது அருந்துவது ஒரு தவறே இல்லை. குடிக்காம இருக்கரவந்தான் அம்மாஞ்சி.
கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா அப்படிங்கற கேள்விய போல, சினிமா சமூகத்த கெடுத்துச்சா இல்ல சமூகத்தில இருந்து சினிமா எடுத்தது காட்டுதாங்கற கேள்வி ரொம்ப நாளாவே இருக்கு. சமூகத்தின் மேல அக்கறை இல்லாத நடிகர்களும் இயக்குனர்களும், ரொம்ப எளிதா சமூகத்தில நடக்கறத தான் சினிமா காட்டுது, நாங்க ஒன்னும் செவ்வாய் கிரகத்துல இருந்து வரலே அப்படின்னு சொல்லி பொறுப்ப தட்டி கழிச்சிட்டு போயிடறாங்க. சரி அப்படியே சமூகத்தில நடக்கறத காட்டுறதுன்னா நல்லதே இங்க நடப்பது இல்லையான்னு இவங்க கிட்ட கேட்ட பதில் வராது. சினிமா பார்க்கும்போது ஒரு ரசிகன் ஆழ்ந்து கவனிக்கரதாலே அங்கே காட்டப்படுவது ரசிகனை அறியாமல் அவனோட ஆழ் மனதில பதிஞ்சுடுது. அடிக்கடி கெட்ட விசயங்கள காட்டினா, உதாரணமா ஒரு முரடன் ஒரு அப்பவிய அடிக்கறத ஊரே பார்த்து பயந்திட்டு இருக்கற மாதிரி காட்டினா, கண்டிப்பா ஒரே ஒரு முரடன பார்த்து ஊரே பயப்படும். ஒரு போலீஸ்காரரை ரௌடி அடிக்கற மாதிரி காட்டின, பொதுமக்களுக்கு போலிஸ் மேல இருக்கற பயமும் மரியாதையும் போய்டும். பொதுமக்களுக்கு போலிஸ் மேல பயம் இல்லேன்னா சமூகத்தில் குற்றங்களை கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம்.
சினிமா உங்களை அறியாம உங்க எண்ணத்தை மாத்திடும்னு நம்ப முடியலே இல்ல. ஒரு உதாரணம் சொல்றேன் - அறிந்தும் அறியாமலும் படத்தில பிரகாஷ் ராஜ் ஒரு தாதாவா நடிச்சிருப்பார், ஆர்யா ஒரு ரௌடியா நடிச்சிருப்பார். அந்த பட கிளைமாக்ஸ்ல நீங்க போலிஸ் ஜெயிக்கணும்னு நெனசீங்கள இல்லே பிரகாஷ்ராஜ் ஜெயிக்கணும்னு நெனசீங்கள? நெறைய பேரு பிரகாஷ்ராஜ் ஜெயிக்கணும்னு நெனசிருக்காங்க..அதனாலே தான் அந்த படம் ஓடிருக்கு..மக்கள் வந்து ரௌடியிசம் இருக்ககூடாதுன்னு நெனைக்கற போலிஸ் தோக்கனும், ஒரு தாதா தப்பிக்கணும்னு நெனைக்கறது நல்லதா?
அந்த காலத்தில மழை பொய்த்ததான் அது ஒரு நியூஸ். இப்போ மழை பெய்தாவே அது ஒரு நியூஸ். நல்லவங்க கம்மியாயிட்டே போறாங்க அப்படிங்கறதோட அடையாளம் தான் இது . காலம் கெட்டுக்கிட்டே வருது. சினிமா உலகின் சில தவறான பிரம்மாக்களே, அது உங்களாலேயோ இல்ல வேற யாரலையோ..ஆனா அதை இன்னும் தயவு செஞ்சு கெடுக்க வேணாம்..
எல்லோரும் நல்ல இருக்கணும்...நல்லதையே நெனைக்கணும்..ஆக்க பூர்வமான சிந்தனைகள் வளரனும்...அதுக்கு உன்னால் முடியும் தம்பி, சாட்டை, இம்சை அரசன் 23ம் புலிகேசி , வெற்றி கொடி கட்டு, பண்டவர் பூமி, ஆனந்தம் இப்படி நல்ல படங்கள் வரணும் ...சினிமா நண்பர்களே தயவு செஞ்சு உங்க படத்தில மரத்த கூட இனி வெட்டாதீங்க..மரம் செழிக்கும் ..மழை பொழியும்.

No comments:
Post a Comment